search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்புமனு தாக்கல்"

    • கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.
    • இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது.

    பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    தேர்தல் பணியில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணியை தொடங்கி கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதனால் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    புதுச்சேரியில் வழக்கமாக ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.

    தற்போது வெயில் அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

    போக்குவரத்து சிக்னலில் கூட 5 நிமிடம் நிற்க முடியாத அளவுக்கு வெயில் உள்ளது. பிரசாரம் செய்யும் காலமும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் இருப்பதால் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
    • மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    5 மாநிலங்களிலும் கடந்த திங்கட்கிழமை முதல் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 5 மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்து இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 5 மாநில தேர்தலில் மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    ஆனால் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் இருப்பதால் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17-ந்தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

    மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 40 சட்டசபை தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அங்கு மனு தாக்கல் செய்ய 20-ந்தேதி கடைசி நாளாகும்.

    21-ந்தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 23-ந்தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. முதல் கட்டமாக நவம்பர் 7-ந்தேதி 20 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கலும் இன்று தொடங்கியது.

    • மத்திய மந்திரி ஜெய்சங்கர் குஜராத்தில் போட்டியிடுகிறார்.
    • குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    காந்திநகர் :

    கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதனால் அந்த இடங்களை நிரப்ப இம்மாதம் 24-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    பதவிக்காலம் முடிவடையும் எம்.பி.க்களில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் ஒருவர். அவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் சட்டசபையில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன், குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜுகல்ஜி தாகோர், தினேஷ் அனவாடியா ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

    எனவே, குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மீண்டும் குஜராத்தில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, ஜெய்சங்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அவருடன் குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல், மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோரும் சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில், தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தாவிடம் ஜெய்சங்கர் வேட்புமனுவை அளித்தார்.

    பின்னர், ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:-

    மாநிலங்களவைக்கு குஜராத்தில் இருந்து போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் மோடி, பா.ஜனதா தலைமை மற்றும் குஜராத் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரதமர் மோடி தலைமையில் கடந்த 4 ஆண்டுகளில் வெளியுறவு கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களில் நானும் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பேன் என்று நம்புகிறேன்.

    மோடி ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் நேபாளம், பூடான், வங்காளதேசம், இலங்கை ஆகிய அண்டை நாடுகளுடான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை அதிகரித்துள்ளோம். பாதுகாப்பு அம்சத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஒரு அண்டை நாடு, பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்துள்ளது. நாம் அந்த சவாலை வலிமையாக எதிர்கொண்டுள்ளோம். நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீதம் உள்ள 2 இடங்களுக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால், இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

    இதுபோல், மேற்கு வங்காளத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி உள்பட 6 பேரின் பதவிக்காலம் முடிவடைவதால், 6 காலியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    6 இடங்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று வேட்பாளர்களை அறிவித்தது.

    டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, சமிருல் இஸ்லாம், பிரகாஷ் சிக் பரைக், சாகேத் கோகலே ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    • 2-வது கட்டமாக 93 தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது.
    • தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும் என்ற நிலையில் ஆம் ஆத்மி 3-வதாக களத்தில் குதித்துள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வியை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. வருகிற 14ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களின் பரிசீலனை 15ம் தேதி நடக்கிறது. 17ம் தேதி மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

    2-வது கட்டமாக 93 தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. 17ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பரிசீலனை 18ம் தேதி நடக்கிறது. மனுவை வாபஸ் பெற நவம்பர் 21ம் தேதி கடைசி தினமாகும்.

    குஜராத் சட்டசபை தேர்தலில் 4.9 கோடி வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    குஜராத் சட்டசபை தேர்தலை நடத்த ரூ.450 கோடி செலவாகும் என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது. 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலை நடத்த ரூ.250 கோடி செலவழிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுக தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.

    திமுக உட்கட்சித் தோ்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 71 மாவட்டச் செயலாளா் பதவிக்கு நடந்த தோ்தலில் 64 மாவட்ட செயலாளா்கள் மீண்டும் அதே பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

    7 மாவட்டச் செயலாளா்கள் மட்டும் புதியவா்கள். இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக்குழு கூடுகிறது.

    சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா்.

    இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவா் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளாா். இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், திமுக தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மொத்தம் 115 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
    • ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை இன்று மாலையில் தெரியவரும்.

    புதுடெல்லி :

    நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னரும், ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டு உள்ளார். அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளரை களமிறக்கி உள்ளன.

    முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்காவை எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தி உள்ளன. இவர் கடந்த 27-ந் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். திரவுபதி முர்முவோ கடந்த வாரமே வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். ஜனாதிபதி தேர்தலில் இவர்கள் இருவரும்தான் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களை தவிர மேலும் 100-க்கும் மேற்பட்டோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் நேற்று ஆகும். நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 115 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பல்வேறு சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் மராட்டியத்தை சேர்ந்த குடிசைவாசி ஒருவர், பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பெயரை கொண்ட ஒருவர், டெல்லியை சேர்ந்த பேராசிரியர், தமிழகத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் என பல்வேறு தரப்பினரும் இந்த தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

    இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) பரிசீலனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை இன்று மாலையில் தெரியவரும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை 50 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். மேலும் 50 பேர் வழிமொழிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ளது.
    • வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் நாளை கடைசி நாள் ஆகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலி பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்திட தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கால அட்டவணை வரப் பெற்றுள்ளது.

    அதன்படி வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் நாளை கடைசி நாள் ஆகும்.

    வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடம், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தஞ்சை மாநகராட்சி வார்டு -8 மற்றும் அய்யம்பேட்டை பேரூராட்சியில் வார்டு -9 என மொத்தம் 30 உள்ளாட்சி பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 32 வாக்குச்சாவடி மையங்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 5 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 37 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தத் தேர்தலில் 6704 ஆண் வாக்காளர்களும், 6986 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 13690 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    ×